அன்னைத்தமிழ் அரவணைத்த பேராசிரியர் க.அன்பழகன்!…. கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்.

அன்னைத்தமிழ் அரவணைத்த
கன்னித்தமிழின் குளிர் தென்றல்
கலைஞர் பெருமகனாரின்
கழகப் பெருந்தூண் பேராசிரியர்
அன்பழகனார் மறைந்தார் …!
ஏற்றமிகு அரசியலில் இணையிலா
உரமாகிக் காலமெல்லாம் கழகத்தில்
உழைத்திட்ட வள்ளல் !
மென்மையான அணுகுமுறை
மெய்சிலிர்க்க வைத்திடும்
அயல்மொழி ஆதிக்கத்தை
அடியோடு எதிர்த்து அன்னைத் தமிழுக்குப்
புகழ்மாலை சூட்டிய
பேராசிரியப் பெருந்தகையே !
தமிழ்க்கடல் ஆர்ப்பரித்த
விடுதலைக் கவிஞன் நீ !
சுயமரியாதைப் பேரொளியில் பூத்த
வியத்தகு இனமானப் பேராசான் நீ !
திருவாரூர் கண்டெடுத்த இன்னொரு
தமிழ்த்தேர் நிலைக்கு வந்ததே !
ஈழத்தமிழர் நலன்காக்க பதவி துறந்த
இணையிலாப் போராளி !
பேரறிஞர் அண்ணாவோடு கைகோர்த்து
ஆரம்பம்முதல் கழகத்தில் ஆணிவேராகப்
பயணித்தப் பெருந்தொண்டன் !
மூப்பினை முதுமைக்குத் தள்ளி
இளமையோடு வாழ்ந்தவரே …
மறைந்தாலும் மறையவில்ல …எம்முள்
உறைகின்றாய் எந்நாளும் ஆசானாய் !
…………கா.ந.கல்யாணசுந்தரம் 
![]()