கவிதைகள்

கண்ணீர்த் துளிகளவை!… சங்கர சுப்பிரமணியன்.

தெளிந்த தடாகமென சஞ்சலமற்றிருந்த உன் முகமும்
தடாகத்தில் சிறு கல்லெறிந்தால்
சுற்றுவட்டமாய் மாறும்
நீரலைபோல்
உன் முகமும் உணர்வுகள்தாக்க
எண்ண அலைகளால் சுழல்கிறதோ
என்னை எண்ணித்தான்
தொடர்கிறதோ
மலரிலிருந்து பனித்துளிகள் உதிர்வதுபோல்
உன் கண்மலரிலிருது சிறுதுளிகள் சிதறுவதேன்?
நானறிவேன் தூசொன்றும் அங்கில்லையென
துகள்களாய் நின்றங்கே அழுத்துவதோ
என் பிம்பம் அங்கில்லாது சில நாட்களுமே
சிரமத்துக்குள்ளாக்கி சிதைப்பதனானால்
சிதறிய கண்ணீர்த் துளிகளவை எனபதை நான்றிவேன்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *