காலையில் எழுந்ததும் தொடர்ந்து தும்மல் வருகிறதா? கட்டுப்படுத்த சில டிப்ஸ்

காலையில் எழுந்ததும் தொடர்ந்து தும்மல் வருவதற்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலை வேளை என்பது குளிர்ச்சியான, அமைதியான வேளையாகும். பெரும்பாலான நபர்கள் அதிகாலையில் இந்த நிசப்தத்தில் இருப்பதற்காக சீக்கிரம் எழும்பி விடுவார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு இவ்வாறான காலை வேளையில் எழும்பியதும், தொடர்ந்து தும்மல் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிவது, கண்களில் அரிப்பு என ஏற்படுகின்றது.

அதுவே ஒரு 10 மணியளவில் குறைந்து சரியாகிவிடுகின்றது. இவை சாதாரண சளிப்பிரச்சனை கிடையாது. அலர்ஜிக் ரைனிடிஸ் எனப்படும் மூக்கில் ஏற்படும் அலர்ஜி பாதிப்பாக இருக்கும்.
அதாவது வெளியில் உள்ள தூசி, பூஞ்சை, மகரந்தம் இவைகள் அலர்ஜியைத் தூண்டும். குறிப்பாக இரவு முழுவதும் நாம் பயன்படுத்தும் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளில் உள்ள தூசி இவற்றிற்கு காரணமாக இருக்கலாம்.
இதற்காக தொடர்ந்து அலர்ஜி மாத்திரையை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை செய்தால் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.
உப்பு கலந்த தண்ணீர்
உப்பு கலந்த தண்ணீரைக் கொண்டு மூக்கைக் கழுவவும். ஏனெனில் மூக்கில் படிந்திருக்கும் தூசி மற்றும் அலர்ஜியைத் தூண்டு துகல்களை வெளியேற்றுமாம். இதற்காக Saline Nasal Rinse முறையைப் பயன்படுத்தலாம். இவை மூக்கில் ஏற்படும் எரிச்சல், அடைப்பு, நீர் வடிதல் ஆகியவற்றை குறைக்கும்.
தலையணை உறை, போர்வை
அடுத்ததாக நாம் பயன்படுத்தும் தலையணை உறை மற்றும் போர்வை இவற்றில் தூசி அதிகமாக இருப்பதுடன், தும்மலுக்கு காரணமாக இருக்கும். ஆகவே இவற்றினை வாரம் ஒருமுறை நன்றாக துவைத்து எடுக்கவும். குறிப்பாக சுடுதண்ணீரில் ஊற வைத்து துவைப்பது அதிக நன்மை கொடுக்கும்.

புகை
சமையல் மற்றும் ஊதிபத்தி, சாம்பிராணி, கொசுவர்த்தி, சிகரெட் இவற்றிலிருந்து வரும் புகை இவை அலர்ஜியை ஏற்படுத்தும். ஆகவே சமையல் அறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தவும். பூஜை அறையில் ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
வீட்டு தரையை துடைப்பது
வீட்டினை கூட்டுவதற்கு பதிலாக ஈரத்துணியினால் துடைக்க வேண்டும். இதனால் தூசிகள் மூக்கில் அலர்ஜியை ஏற்படுத்தாமல் இருக்கும். அதுமட்டுமின்றி இவ்வாறு பெருக்காமல் துடைப்பதால் படுக்கையறையிலும் தூசி சேராமல் இருக்கும்.

உடைகளை மாற்றவும்
வெளியே சென்று வீடு திரும்பியதும் உடைகளை மாற்றவும். ஏனெனில் வெளியிலுள்ள தூசி, மகரந்தம் இவைகள் சருமத்தில் அல்லது முடியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். வெளியில் பயணம் செய்பவர்கள் முகக்கவனம் அணிவதும் உதவியாக இருக்கும்.
உடற்பயிற்சி
தினமும் 30 நிமிடம் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி அலர்ஜி அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும். ஆதலால் நடைபயிற்சி, யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி இவற்றினை கட்டாயம் செய்வது அவசியம்.
ஆனால் தும்மல் தொடர்ந்து வந்து எந்தவேலையும் செய்யாமல் இருந்தால், மருத்துவரை பார்ப்பது சிறந்தது..

![]()