பலதும் பத்தும்

குழந்தையின் பிறப்பைக் விண்வெளி நிலையத்தில் கொண்டாடிய கனேடிய விண்வெளி வீரர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் கனேடிய விண்வெளி வீரர் ஜோசுவா குட்ரிக், பூமியிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தவாறு தனது மூன்றாவது குழந்தையின் (பெண் குழந்தையின்) பிறப்பைக் கொண்டாடியுள்ளதாகக் கனேடிய விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த வேளையில் மனைவிக்கு குழந்தை பிறந்த வரலாற்றில், நான்காவது விண்வெளி வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமான ஆறு மாத ‘ஸ்பேஸ்எக்ஸ் குரூ-13’ (SpaceX Crew-13) விண்வெளிப் பயணத் திட்டத்தில் பங்கேற்றுள்ள அவரது முதலாவது விண்வெளிப் பயணம் இதுவாகும்.

“எங்களுக்கிடையில் பெரும் தூரம் இருந்தபோதிலும், எங்கள் வாழ்வில் இணைந்துள்ள இந்தச் சின்னஞ்சிறு நட்சத்திரத்தை வரவேற்கும் தருணத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உணர்கிறோம்” என இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜோசுவா குட்ரிக் மற்றும் அவரது மனைவி ஹெதர் குட்ரிக் ஆகியோருக்கு ஏற்கனவே 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தங்கள் குடும்பம் மீண்டும் இணையும் நாளுக்காகக் காத்திருப்பதாக இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *