உலகம்

ஆஸ்திரேலியா முழுவதும் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் அனல் காற்று வீசும் எனவும், கடுமையான வெப்பம் நிலவும் எனவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரவிருக்கும் கோடைக்காலம் வழக்கத்தைவிட அதிக வெப்பத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எல் நினோ (El Niño) வலுப்பெற்று வருவதால் வெப்பநிலை உயர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய வடக்கு ஆஸ்திரேலியா, கிழக்கு தாஸ்மானியா மற்றும் நியூ சவுத் வேல்ஸின் போர்ட் மெக்குவாரி பகுதிகளில் மிகக் கடுமையான வெப்பம் நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெப்பத்துடன் வறட்சியும் அதிகரிக்கக்கூடும் என்றும் சில பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்கு குயின்ஸ்லாந்து மற்றும் வடகிழக்கு நியூ சவுத் வேல்ஸில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *