இந்தியா

தமிழகத்தின் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழகத்தில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்கக் கோரும் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (27) தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.

திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குறித்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பதற்குக் கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தீர்ப்புத் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *