இலங்கை

செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்த பாராளுமன்றம்

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள்செயற்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து செம்மஞ்சள் நிறத்தில் பாராளுமன்றம் ஒளிர்ந்தது

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள்உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடையாளச்சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

இதற்கு இணையாக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஆண்பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றப் பணியாளர்களும் செம்மஞ்சள்அல்லது செம்மஞ்சள் கலந்த ஆடைகளை அணிந்து இந்நிகழ்ச்சிக்கு ஆதரவுதெரிவித்தனர்.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சனத்தொகைநிதியத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு இணையாக,பாராளுமன்றத்திற்குள் 16 நாட்களுக்கான நிகழ்ச்சித் தொடரொன்றும்முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும்விடுத்தார். இதன்போது, நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரைநடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள்

உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில், ஐக்கியநாடுகள் சனத்தொகை நிதியத்துடன் இணைந்து பெண் பாராளுமன்றஉறுப்பினர்கள் ஒன்றியம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிக்கு இலங்கைப்பாராளுமன்றத்தின் ஆதரவைத் தெரிவிப்பதாக அவர் சபைக்கு அறிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பாலின அடிப்படையிலானவன்முறைகளை இல்லாதொழிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைத்தடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் கூட்டுப் பங்களிப்பும் பொறுப்புணர்வும்அவசியத்தை சுட்டிக்காட்டினர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *