முச்சந்தி

சித்திரவதை நடக்கவில்லை சுரேஷ் சலே குறித்து 300 பக்க அறிக்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐந்து பேர் கொண்ட விசேட நிபுணத்துவ மனநல மருத்துவக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

300க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குறித்த விசேட மருத்துவ அறிக்கை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த அறிக்கை தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், அஹுங்கல்ல RIU ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்து சுரேஷ் சலேவின் குடும்பத்தினரும், மௌலானாவின் குடும்பத்தினரும் தங்கியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த அறைகளை முன்பதிவு செய்தமை தொடர்பான கடன் அட்டை விபரங்கள் உள்ளிட்ட பல தகவல்களும் நேற்று (25) நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *