இலங்கை

நாமலின் அரசியலை மாற்றும் லிமினி – தொடர் தோல்வியால் ராஜபக்சர்களால் எடுக்கப்பட்டுள்ள புதிய அஸ்திரம்

சமகால அரசாங்கத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பி வெளியில் வருவார் என்ற நம்பிக்கையை ராஜபக்ச தரப்பினரே கைவிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் நாமலின் மனைவியை, அரசியல் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக பாரியளவில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

சிறைத் தண்டனை

இவ்வாறான நிலையில், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து நாமல் ராஜபக்ச, குற்றவாளியாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரைத் தனது அரசியல் அஸ்திரமாக மாற்றியுள்ளார்.

நாமலின் அரசியலை மாற்றும் லிமினி - தொடர் தோல்வியால் ராஜபக்சர்களால் எடுக்கப்பட்டுள்ள புதிய அஸ்திரம் | Namal Rajapaksa In New Root

கடந்த 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச, சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராஜாவை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததைப் போன்று, கலகொடஅத்தே தேரரையும் விடுவிக்க வேண்டும் என நாமல் தெரிவித்துள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்துக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் நேரடியாகவே குற்றவாளிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என ஏனைய நபர்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நாமல் ராஜபக்சவே நேரடியாக முன்வந்துள்ளமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *