இந்தியா

முதல்வர் விஜய் தலைமையில் இன்று தொடங்கும் தவெக கல்வி விருது விழா

முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தலைமையில், தவெக கல்வி விருது விழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

கல்வி விருது விழா

தவெக சார்பில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நடப்பாண்டுக்கான முதல் கட்ட கல்வி விருது விழா கடந்த 4ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, 2ஆம் கட்ட கல்வி விருது விழா இன்று மற்றும் நாளை சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

 

முதல்வர் விஜய் தலைமையில் இன்று தொடங்கும் தவெக கல்வி விருது விழா | Tvk Educational Awards Ceremony

இந்த விழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் மாணவர்களுக்கு கல்வி விருது மற்றும் உதவித்தொகைகளை வழங்கி பாராட்டவுள்ளார்.

 

மேலும், விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பிரத்யேக நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

விழா அரங்கிற்குள் கைப்பேசி, காகிதங்கள், பேனா உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *