இலங்கை

செம்மணியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: நீதியான விசாரணை நடத்தப்படும்

செம்மணி மனிதப் புதைக்குழியில் மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்பு கூடுகள் தொடர்பில் நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தும் என மகளிர் சிறுவர் அலுவல் கள் அமைச்சர் சரோஜா போல் ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழி தொடர்பில் தொடர்பாக நீதி அமைச்சர் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார் நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என.

அரசாங்கம் என்ற வகையில் செம்மணி புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொண்டு உண்மை கண்டறியப்படும்.

ஆகவே பகுப்பாய்வுகள் இடம்பெற்று அவை தொடர்பில் விசாரணைகள் உரிய முறையில் இடம்பெற்றதன் பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் நிச்சயம் கவனமெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *