இந்தியாவின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு டிரம்ப் பாராட்டு

அமெரிக்க மத்திய வங்கியை விமர்சித்த நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வட்டி வீதங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும், இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
4 நாள் ஆசியப் பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளை மாளிகை திரும்பிய அவர், அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்க மத்திய வங்கி மிகவும் அரசியல்மயமாகச் செயல்படுவதாகவும், நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்போதெல்லாம் வட்டி வீதத்தை உயர்த்தி வளர்ச்சியைச் சீரழிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வட்டி வீதத்தைக் குறைத்தால் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதத்திற்குப் பதிலாக 15 முதல் 20 சதவீதம் வரை உயரும் என்றும், நாட்டின் கடன்களை விரைவாக அடைக்க முடியும் என்றும் அவர் தெரிவிக்கார்.
இந்தச் சூழலில் இந்தியாவை உதாரணமாகக் காட்டிய டிரம்ப், இந்தியாவில் குறைந்த வட்டி வீதம் இருப்பதால்தான் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிகிறது என்று குறிப்பிட்டார்.
உலகின் மற்ற நாடுகளை நிதி ரீதியாக உயர்த்தும் அமெரிக்காவில், வட்டி வீதம் மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கெவின் வார்ஷ் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதத்தைக் உயர்த்தியது.
இது 2023-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் உயர்வு ஆகும்.
ஜூலை செப்டம்பர் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்திய ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் தனது ரெப்போ வட்டி வீதத்தைக் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.5 சதவீதமாக நிர்ணயித்தது.
இருப்பினும், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
![]()