உலகம்

மனித மேற்பார்வையே இல்லாத ஆயுதங்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விவாதம் – 100 நாடுகள் ஆதரவு

மிகக் குறைந்த அல்லது மனித மேற்பார்வையே இல்லாத ஆயுதங்களை ஒழுங்குபடுத்துவது குறித்து  இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய விதிகளை உருவாக்குவது தொடர்பில் ஐ.நா பேச்சுவார்த்தையாளர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமை குழுக்களால்  இன்று  இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பல்வேறு அளவிலான தன்னாட்சியுடன் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்கக்கூடிய, சில சமயங்களில் “கொலைகார ரோபோக்கள்” என்று அழைக்கப்படும் ஆயுத அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு, சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் விதிகளை உருவாக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.

இந்த நிலைப்பாட்டை 100 நாடுகள் ஆதரித்துள்ள நிலையில் ரஷ்யா மற்றும் இஸ்ரேல் போன்ற பெரிய ஆயுத உற்பத்தி நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதன் விளைவாக, எதிர்கால நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

உக்ரைன், சூடான் மற்றும் மத்திய கிழக்கு உட்பட மோதல்களில் கொடிய தன்னாட்சி ஆயுத அமைப்புகளின் பயன்பாடு குறித்த கவலை அதிகரித்து வருவதால், இது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது.

மேலும்  ஐ.நா. பொதுச்செயலாளர், போப் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அனைவரும் வலுவான மற்றும் சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் விதிகளை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *