இலங்கை

2027 வரை பிள்ளையானிற்கு விடுதலை இல்லை

பிள்ளையானை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் அன்றைய தினம் இந்தப் பிணைக் கோரிக்கை தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு அறிவித்து சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது மனுதாரரான பிள்ளையான் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மனோஹர த சில்வா நீதிமன்றில் விடயங்களை முன்வைத்துத் தெரிவிக்கையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *