இலங்கை

UNP மறுசீரமைப்பு முயற்சி – ஜென் Z’ தலைமுறையினருக்கு வாய்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP), கட்சியை நவீனமயமாக்கவும் இளம் வாக்காளர்களைக் கவரவும் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, புதிய இலச்சினையை வெளியிட்டதோடு, ‘ஜென் Z’ தலைமுறையினரை இலக்காகக் கொண்ட ஒரு புதிய முன்னெடுப்பையும் தொடங்கியுள்ளது.

இந்த முன்னெடுப்பு, இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், இளைய தலைமுறையினர் அரசியலில் பெரும் பங்கு வகிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கமைய சமீபத்தில் ‘ஜென் Z UNP’ மற்றும் ‘மில்லினியல் UNP’ என இரண்டு புதிய உறுப்பினர் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அக்கட்சியின் தலைவர் வஜிரா அபேவர்தனவின் கூற்றுப்படி, ‘ஜென் Z UNP’ 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அதே நேரத்தில் ‘மில்லினியல் UNP’ 35 முதல் 40 வயதுக்குட்பட்ட நபர்களை மையமாகக் கொண்டிருக்கும் என்றார்.

அத்துடன் வருங்காலத் தேர்தல் வெற்றிகளைப் பெறுவதற்குப் பாரம்பரிய அரசியல் கூட்டணிகள் மட்டும் போதுமானதாக இருக்காது என்றும், இளம் வாக்காளர்களைக் கவர்வதன் முக்கியத்துவத்தை விக்ரமசிங்க முன்னரே வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அரசியல் கட்சிகள் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், இளம் தலைமுறையினரை ஈடுபடுத்துவதற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *