இலங்கை

மீண்டும் பலத்தை காட்டியது அநுர அரசு: பாதீடு நிறைவேற்றம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றிருந்த நிலையில், பொரும்பான்மை வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றிருந்த நிலையில்,

ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சி வாக்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கைசுற்றுலா

நாடாளுமன்றத்தின் சபை அமர்வுகள்  ஆரம்பமாகியுள்ளதுடன் பட்ஜட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 13ஆம் திகதி தொடக்கம் இன்று வரை 7 நாட்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றிருந்தது.

அத்துடன் இறுதியான இன்று இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடும்பும் இடம்பெற்றது. வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் நாளையதினம் ஆரம்பமாகவுள்ளதுடன் அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *