உலகம்

ஈரான் மீது போர் தொடங்குவதை யாராலும் தடுக்க முடியாது!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும், அந்த போரை யாராலும் தடுக்க முடியாது என்றும் இஸ்ரேலின் தற்காலிக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கி சுமார் 8 மாதத்திற்கும் மேலாக அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல் மூலம் தான் இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் திரும்ப பெற இஸ்ரேல் தற்காலிக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து இஸ்ரேல் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானுக்கு எதிரான மற்றொரு இராணுவ நடவடிக்கையை தவிர்க்க முடியாது என முதல்தர அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரதமர் நெதன்யாகு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கட்டளை பிரிவு அதிகாரிகள், தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும், அவற்றை எப்போது தொடங்குவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க செனட் சபையில் கடந்த நேற்று (19) ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அப்போது 51 – 48 என்று வாக்கு செலுத்திய செனட் உறுப்பினர்கள், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்பின் ஒப்புதலை பெறுவது கட்டாயம் என்ற மசோதாவுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

மேலும் டிரம்பின் ஒப்புதலை பெற்று ஈரான் மீதான போரை தொடங்குவதற்கும் செனட் உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த சூழலில் ஈரான் விவகாரத்தில் தான் எந்த முடிவையும் அவசரமாக எடுக்க விரும்பவில்லை என்றும் அடுத்த ஆண்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை அமெரிக்கா பார்க்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் விவாதிப்பேன் என்றும், அதற்கு இன்னும் நேரம் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *