பலதும் பத்தும்

ரயில் பெட்டிகளில் கற்பூரம் ஏற்றினால் சிறை தண்டனை!

சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்திய ரயில்வே நிர்வாகம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தின்போது பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவதோ, ஆரத்தி எடுப்பதோ கூடாது என இந்திய தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

தீ விபத்துகளைத் தவிர்க்க நெய், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறுவோர் மீது ரயில்வே சட்டம் 1989, பிரிவு 164 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். பயணிகள் இதுபோன்ற செயல்களைக் கண்டால் உடனடியாக 139 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் இக்கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *