பாப்பரசரைக் கவர்ந்த குட்டிப் பாப்பரசர்

பெரு நாட்டிற்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து மீண்டும் வத்திக்கானுக்குத் திரும்பிய 14ஆம் லியோ பாப்பரசர், புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு நெகிழ்ச்சியான தருணம் இடம்பெற்றது. தன்னைப் போலவே பாப்பரசர் உடையணிந்து வந்திருந்த அழகிய குழந்தையொன்றை அவர் கையில் ஏந்தி அன்புடன் முத்தமிட்டு ஆசி வழங்கினார்.
‘யுவான் டியேகோ’ என்ற பெயருடைய இந்தக் குழந்தை, பாப்பரசரிடம் ஆசி பெறுவதற்காகத் தனது பெற்றோருடன் எல் சால்வடோர் நாட்டிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாப்பரசரின் தோற்றத்தில் வந்திருந்த அக்குழந்தையைப் பார்த்ததும் வத்திக்கான் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் ஏற்பட்டதுடன், இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் தற்போது வைரலாகி வருகின்றன.
![]()