இலங்கை

இம்ரான்கானின் விடுதலைக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம்

பாகிஸ்தான் சிறையில் உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரும் பிரேரணை தொடர்பில், இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் சனிக்கிழமை (நவம்பர் 21) விவாதம் நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கமைய இதற்குரிய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கொண்டுவரவுள்ளார்.

இதற்குரிய பிரேரணையை அவர் கையளித்துள்ளார் என தெரியவருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *