இந்திய உயர்ஸ்தானி கராலயத்தினால் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கற்றல் வளங்கள் கையளிப்பு

கொட்டகலை நிருபர்
கண்டி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் முகமாக கற்றல் வளங்களை கையளிக்கும் நிகழ்வு (18.11.2027) புதன் கிழமை நு /கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ். ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. சரண்யா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தேவையான மேசைகள், கதிரைகள், ஸ்மார்ட் பலகைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை கையளித்தார். இந்நிகழ்வின் விசேட அதிதியாக நுவரெலிய கல்வி பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் கணேஷ்ராஜ் கலந்து கொண்டதுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் பானா தங்கம் பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறான பெறுமதிமிக்க கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டமையானது, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கும், நவீன கற்றல் கற்பித்தல் முறைகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த உந்துசக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எதிர்கால தலைமுறையினரை வலுவூட்டுவோம் என்ற அடிப்படையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவித்து பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைக்கு இப்பெறுமதிமிக்க கல்வி உபகரணங்களை வழங்கியமைக்காக தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் இந்தியத் துணை உயர்ஸ்தானிகராலயத்திக்கு தமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் பாடசாலைச் சமூகம் சார்பில் தெரிவித்து கொள்கின்றனர்.


![]()