இலங்கை
மஹிந்தஷவின் பிறந்தநாளுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (18) தொலைபேசி மூலம் அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
1945ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகவும், பின்னர் பிரதமராகவும் பணியாற்றியுள்ளார்.
![]()