இலங்கை

அரசியல் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்துக!; அநுர அரசிடம் வலியுறுத்தல்

அநுர அரசு முன்னெடுத்து வரும் அரசியல் பழிவாங்கல்களையும், தொழிற்சங்க அடக்குமுறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் நோக்கம்

மேலும் தெரிவிக்கையில், “தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித எவ்வித ஊழலோ, மோசடியோ செய்யவில்லை. அவர் சட்டபூர்வமாகவே தனது உரிமைகளைப் பெற்றுள்ளார்.

ஆனால், அரசின் ஊழல், மோசடிகளையும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முறைகேடுகளையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தியமையாலேயே அரசியல் பழிவாங்கல் நோக்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அரசியல் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்துக! அநுர அரசிடம் வலியுறுத்தல் | Stop Political Vendettas Immediately Anura Govt

அவ்வாறு அவர் தவறு இழைத்திருந்தால், அவருக்குப் பணம் வழங்கிய உயர் அதிகாரிகளையும் கைது செய்திருக்க வேண்டும்.

அரசின் மீதான மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதால், இவ்வாறான அடக்குமுறைகளை அரசு கையாளுகின்றது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றை அரசு கொண்டுவரவுள்ளது. இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் தொழிற்சங்க அடக்குமுறைகள் மேலும் தீவிரமடையும். இதற்கு நாம் முழுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம்.

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம்

மக்களின் வாழ்க்கைச் செலவு உச்சத்தை எட்டியுள்ளதுடன், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் பேருந்து கட்டணங்களும் அதிகரித்துள்ளன.

அரசியல் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்துக! அநுர அரசிடம் வலியுறுத்தல் | Stop Political Vendettas Immediately Anura Govt

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளின்படி நாட்டில் வறுமை நிலை அதிகரித்துள்ளது. ஆனால், வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி அரசு வெறும் இலக்க வித்தையை மாத்திரமே காட்டுகின்றது.

அரச ஊழியர்களை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. நல்லாட்சி அரசின் காலத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை நாம் 107 சதவீதத்தால் அதிகரித்தோம்.

ஆனால், தற்போதைய அரசு சொற்பத் தொகையை மாத்திரம் அதிகரித்துள்ளதால், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் இன்று வீதிக்கு இறங்கிப் போராடுகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *