முச்சந்தி

குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு

நக்கிள்ஸ் சம்பவத்திற்கு முகம்கொடுத்த சிறுமிக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான தேவையான உளவியல் சமூக ஆலோசனை ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக இவ்வாறான உதவிகளை வழங்குமாறு குறித்த அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த சிறுமியின் கட்டாயக் கல்வி வயது பூர்த்தியடையும் வரை அல்லது அவரது விருப்பத்திற்கேற்ப உயர் கல்வி அல்லது தொழிற்கல்விக்குத் திசைகாட்டும் வரை அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக, பச்சிளம் குழந்தையின் போசாக்கு மற்றும் கல்வித் தேவைகளுக்காகவும் ‘அர்த்த’ (Arthra) கொடுப்பனவை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *