இலங்கை

வவுனியா வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகிகள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியும், முன்னாள் தலைவரும் வவுனியா நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி அ.மதிமுகராசா, மற்றும் ஆலயத்தின் முன்னாள் செயலாளர் து.தமிழ்ச்செல்வன், முன்னாள் தலைவர் செ.சசிகுமார் ஆகியோரை   வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்புக்கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகவே குறித்த கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஆலயத்தின் பூசாரியும்,முன்னாள் தலைவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வவுனியா வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகிகள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு! | Vedukkunari Malai In Vavuniya Released On Bail

குறித்த நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருஅருள் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை ஆலயத்தின் முன்னாள் செயலாளரான து.தமிழ்ச்செல்வன் வெளிநாடொன்றில் வசித்து வருகின்றமையால் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *