இம்முறையும் 2026 முன்மொழிவுகள்; ஜனாதிபதிக்கு ஞாபக மறதி நோய்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதன மூலம் நிதியமைச்சரான ஜனாதிபதிக்கு ஞாபகம் மறதி நோய் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி. ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
ஜனாதிபதி சிறந்த பேச்சாற்றல் வீரர் ஆனால் . அவர் செயல் வீரனல்ல,2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நிதியமைச்சரான ஜனாதிபதி ஐந்து மணிநேரம் உரையாற்றினார். நாங்களும் அசௌகரியத்துக்கு மத்தியில் உரையை கேட்டுக் கொண்டிருந்தோம்.
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளில் 40 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியில் 20 சதவீதம் கூட செலவழிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் வெற்றி பெற்றுள்ளன என்று எவ்வாறு கூற முடியும்?
நிதியமைச்சரான ஜனாதிபதி 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட திட்டங்களை , 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் குறிப்பிட்டார்.அதி குறிப்பிட்டவற்றையே தற்போது 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதிக்கு ஞாபகம் மறதி நோய் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முதலீட்டாளர்களை பாதுகாக்கும் சட்டம், அரச கொள்கை மறுசீரமைப்பு சட்டம், டிஜிட்டல் பொருளாதார சட்டம் , நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை சட்டம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் இந்த சட்ட உருவாக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டது.
மக்கள் மீது வரிகளை விதித்து, மக்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளியே திறைசேரியின் கையிருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை என்றார்.
![]()