இலங்கை

ஞானசார தேரருக்கு மீண்டும் காவியை அணிவிக்க உடன் நடவடிக்கை வேண்டும்

காவி நீக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் விதிகளுக்குட்பட்டு காவி ஆடையை அணிவிப்பதற்காக, கோட்டை ஸ்ரீ கல்யாணி சமாகிரிதர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரின் கோரிக்கைக்கு இணங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேரர்கள் குழுவினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேரர்கள் குழுவினர் இன்று (16) சிறைச்சாலை தலைமையகத்திற்கு வருகை தந்ததுடன், அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

சிறைவாசம் அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடை சிறைச்சாலையில் நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் சமூகத்தில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது.

பின்னர் காவி தரித்திருப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் சிறைச்சாலை நிலையான கட்டளைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், காவி நீக்கப்பட்ட ஞானசார தேரருக்கு விதிகளுக்குட்பட்டு மீண்டும் காவி அணிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி, கோட்டை ஸ்ரீ கல்யாணி சமாகிரிதர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விபரிப்பதற்காகவே தேரர்கள் குழுவினர் இன்று இவ்வாறு சிறைச்சாலை தலைமையகத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *