பலதும் பத்தும்

எலான் மஸ்க்கின் புதிய சாதனை; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SpaceX இன் ‘ஸ்டார்ஷிப்’ ரொக்கெட்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 15ஆவது ஸ்டார்ஷிப் ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

எனினும், தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக அதன் சூப்பர் ஹெவி பூஸ்டரை (Super Heavy Booster) ஏவுதளத்திலுள்ள மெகஸில்லா இயந்திரக் கரங்கள் மூலம் மீண்டும் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டதையடுத்து, அது கடலில் இறக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் புதிய சாதனை ; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SpaceXஇன் ‘ஸ்டார்ஷிப்’ ரொக்கெட் | Elon Musk S Starship Blasts Off Into Space

 புதிய மைல்கல்

இதனிடையே, ஸ்டார்ஷிப் விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்ததுடன், அதனுடன் எடுத்துச் செல்லப்பட்ட 26 ஸ்டார்லிங்க் V3 இணையச் செயற்கைக்கோள்களையும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.

இந்த விண்கலம் மணிக்கு சுமார் 28,000 கிலோமீற்றர் வேகத்தில் பூமியைச் சுற்றி 14 முறை வலம் வரவுள்ளது.

சுமார் 22 மணித்தியாலப் பயணத்தின் பின்னர், இலங்கை நேரப்படி நாளை (15) அதிகாலை 2.49 மணியளவில் மீண்டும் ஏவுதளத்திற்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது, விண்கலத்தைச் செங்குத்தாகத் தரையிறக்கி, மெகஸில்லா ஏவுதளக் கோபுரத்தின் இயந்திரக் கரங்கள் மூலம் பிடிப்பதற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், விண்வெளி ஆய்வுத்துறையில் புதிய மைல்கல்லாக அமையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *