இலங்கை

30ஆவது வாரத்தை எட்டிய யாழ். மயிலிட்டி மக்களின் போராட்டம்

யாழ்ப்பாணம் மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனவீர்ப்புப் போராட்டம் இந்த வாரத்துடன் 30ஆவது வாரத்தை எட்டியுள்ளது.

சுமார் 36 ஆண்டுகளாகத் தமது சொந்த நிலங்களையும் வாழ்விடங்களையும் இழந்து வாழும் மக்கள், காணிகளை விடுவித்து மீள்குடியேற அனுமதிக்குமாறு வலியுறுத்தி மயிலிட்டி இராணுவ கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தலைமுறைகளாக வாழ்ந்த பூர்வீக மண்ணில் தங்களால் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்வதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் பூர்வீக உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *