உலகம்

கினியாவில் பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் -10 பேர் பலி

கினியாவின் வடகிழக்குப் பகுதியில், தங்கம் வெட்டி எடுக்கப்படும் இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிராந்திய நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கினியாவின் சிகுரி (Siguiri) பகுதியில், கைமுறை முறையில் தங்கம் வெட்டி எடுக்கும் நடவடிக்கைக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசின் உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.

இதன்விளைவாக ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை உயிரிழந்த வெளிநாட்டவர்களின் தேசிய இனம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *