உலகம்

பாகிஸ்தானில் ஆற்றில் விழுந்து வேன் விபத்து – 11 பேர் பலி

பாகிஸ்தானில், பயணிகள் வேன் ஒன்று மலைப்பாதையிலிருந்து விலகி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்ற நிலையில் அவசரகால மீட்பு பணிகள் இன்று கால வரை நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலும் மூவர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணிகள் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *