இலங்கை
மக்களின் பிரச்சினைக்கு எந்தவித தீர்வும் இல்லை; சாணக்கியன் எம்.பி. கூறுகிறார்

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் இல்லாத வரவு செலவு திட்டமாகவே ஜனாதிபதி முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை தொடர்பில், கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் அடிப்படை பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றது ஆனால் அவற்றுக்கு எந்த வித தீர்வும் இல்லாத வரவு செலவு திட்டத்தையே ஜனாதிபதி முன் வைத்துள்ளார் என தெரிவித்தார்.
![]()