இலங்கை

கோட்டாபய கொடுத்த வாய்ப்பை இல்லாமலாக்கிய ஜனாதிபதி!; அநுரவின் மிகப்பெரிய பாவச் செயல்

சிங்கள, பௌத்த கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கையில், மிகப் பெரிய பாவச் செயலில் ஈடுபடும் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இருப்பதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடை கழற்றப்பட்ட சம்பவத்தில் இந்த அரசாங்கம் நடந்து கொண்ட விதத்தை நாங்கள் பார்த்தோம்.

கோட்டாபய கொடுத்த வாய்ப்பு

 

அதனை எதிர்த்து மகா சங்கத்தினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி ஊர்வலமாக வந்தபோது, இடைநடுவில் அவர்களுக்கு அன்னதானம் வழங்கக் கூடாது, தங்குவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகப் பல்வேறு விகாரைகளுக்குச் சென்று எவ்வாறெல்லாம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்பதை நாம் தனிப்பட்ட முறையில் அறிவோம்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றி ஏராளமானோர் தங்கியிருப்பதற்கும் ஒன்றுகூடுவதற்கும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், மகா சங்கத்தினர் அங்கு சென்றபோது நீதிமன்ற உத்தவைப் பெற்று அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கோட்டாபய கொடுத்த வாய்ப்பை இல்லாமலாக்கிய ஜனாதிபதி! அநுரவின் மிகப்பெரிய பாவச் செயல் | Gravest Sinful Act Committed By President Anura

 

அதன் பின்னர் விகாரமகாதேவி பூங்காவிற்குச் சென்றபோதும், அங்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. பிக்குகள் தாக்கப்பட்டு, அங்கிருந்த வெளியேற்றுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோன்ற மற்றுமொரு சம்பவம் அண்மையில் அநுராதபுரத்தில் இடம்பெற்றதாகச் செய்திகள் வெளியாகின.

அநுராதபுரம் என்பது ஒரு புனித பூமியாகும். பௌத்த பிக்குகள் தங்கியிருந்து தமது மதக் கடமைகளை முன்னெடுப்பதற்கான உரிமைகளைக் கொண்ட இடமாகும். அத்தகைய இடத்தில் கூட பௌத்த பிக்குகள் தாக்கப்படுவதை நாம் பார்த்தோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களைப் பயன்படுத்தி, திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்கி, அந்தப் பிரச்சினைகளின் ஊடாக பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

அதேவேளை, அரசஙா்கத்திற்கு ஆதரவான சில பௌத்த பிக்குகளைப் பயன்படுத்தியும், சமூக ஊடகங்களின் ஊடாகவும் மகா சங்கத்தினருக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான பிரசாரங்களை முன்னெடுத்து. அவர்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நாம் காண்கின்றோம்.

குறிப்பாக, பௌத்த சங்கத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களே, பௌத்த மதக் கொள்கைகளின்படி மனிதனால் செய்யக் கூடிய மிகப்பெரிய ஐந்து பாவச் செயல்கள் குறித்து நாங்கள் அறிந்திருக்கின்றொம்.

கோட்டாபய கொடுத்த வாய்ப்பை இல்லாமலாக்கிய ஜனாதிபதி! அநுரவின் மிகப்பெரிய பாவச் செயல் | Gravest Sinful Act Committed By President Anura

 

தாயைக் கொலை செய்தல், தந்தையைக் கொலை செய்தல், பௌத்த சங்கத்தினரிடையே பிளவை ஏற்படுத்தல் உள்ளிட் ஐந்து பாதகச் செயல்கள் மிகப்பெரிய பாவங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரசாங்கம் தற்போது மேற்கொள்வது, அந்த ஐந்து பாவங்களில் ஒன்றான சங்க பேதத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

இந்த பின்னணியில் நாட்டின் ஜனாதிபதி இருக்கின்றார் என்றால், அதற்கான பொறுப்பை அவரே ஏற்க வேண்டும். சிங்கள் பௌத்த கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கையில், இவ்வாறான மிகப் பெரிய பாவச் செயலில் ஈடுபடும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இருப்பது நாட்டிற்கு ஒருபோம் நன்மை பயக்காது.

எனவே, பௌத்த பிக்குகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த சதித் திட்டங்களை உடனடியாக நிறுத்தி, அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களுக்கு அமைவாக பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கோருகின்றோம்.

ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால், அந்த நாட்டின் கலாசாரத்தை அழிப்பதன் ஊடாக அதனை இலகுவாகச் செய்துவிட முடியும். இந்த அரசாங்கம், நாட்டின் பௌத்த கலாசாரத்தை அழித்து, நாட்டையும் இனத்தையும் சீரழிப்பதற்காக தமக்கு வாக்களித்து ஆட்சிக்கு வர உதவியவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுகின்றதா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *