இலங்கை

அகண்ட பாரதக் கனவுக்கு அநுர பலியாகிறாரா?; இந்தியாவின் பயணப் பாதை ஆபத்தானது!; அவர்களுக்கு அடிபணிந்த தனி ஈழத்தை உருவாக்கவா அநுர ஆட்சி?

இந்தியாவின் பயணப் பாதை மிகவும் ஆபத்தானது. அகண்ட பாரதத்தை உருவாக்குவதற்காக தனக்கு அடிபணிந்த தனி ஈழமொன்றை அமைக்கும் வகையிலேயே இந்தியாவின் பயணம் அமைந்துள்ளது. இந்த விடயத்தில் இந்தியாவுக்கு ஏற்றால் போன்று அநுரகுமார ஆடினாலும் அநுரவுக்கு ஏற்றால் போன்று நாங்கள் ஆடுவதற்கு தயாரில்லை என்று பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக சத்தியாக்கிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை நடத் தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புனித பூமி விடயத்தில் இந்தியாவின் உதவியில் நரேந்திர மோடியின் தாளத்திற்கு ஏற்றால் போன்று ஆடும் நேரத்தில் அதில்
இருந்து இந்த புனித பூமியை மீட்கப்ப தற்காக மக்களை தெளிவுப்படுத்தும் வகையில் அநுராதபுரத்தில் தர்மதான நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் அரசியலமைப்பில் 9ஆவது பிரிவில் உள்ள உரிமைகளுக்கமையவே இந்த நடவடிக் கையில் ஈடுபடுகின்றோம். இவ்வாறான நிலைமையில் ஏன் எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்.

பொலிஸார் எங்கள் மீது தாக்குதல் நடத்தி எங்களை துன்புறுத்தும் நிலையில் நாங்கள் இந்த இடத்தில் இருந்து அகல மாட்டோம். நாங்கள் தவறு செய்யவில்லை. இந்தியா வுடனான உடன்படிக்கைக்கு அமைய போலியான அபிவிருத்தியில் இங்குள்ள காணிகளை விற்று, மக்களை விரட்டி, சர்வமத நகராமாக்கி, உறங்காத நகரமாக்கி, தொல்பொருள் பூமியை பாட்டுபாடி இல் லாமல் செய்வதற்கு எதிராகவே நாங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த விடயத்தில் எங்களுக்கு உதவிய ளிக்கும் சட்டத்தரணிகள் அனைவருக்கும் எமது நன்றியை கூறிக்கொள்கின்றோம். நாங்கள் பௌத்த சட்டம் தொடர்பிலேயே கதைக்கின்றோம். இது அரசியலமைப் பில் 9 வது பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ளது. இதனால் இது தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் அதி காரம் கிடையாது. அரசியலமைப்பின் 105/4ஆம் சரத்துக்கமைய பௌத்தர்களுக்கு கனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. சரியென்றால் அந்த நீதிமன் றத்தை அமைத்திருந்தால் அதில் விசார ணைகள் நடத்தப்பட வேண்டும்.

நாங்கள் சிங்கள பௌத்த தாயின் வயிற் றில் இருந்தே பிறந்துள்ளோம். சிங்கள பௌத்த தாய்மாரின் தங்கப் பாலையே நாங்கள் குடித்துள்ளோம். இதனால் எமது தாய்நாட்டை வெளிநாடுகளுக்கு கொடுக்க
நாங்கள் இடமளிக்க மாட்டோம். இந்தியா வுக்கு ஏற்றால் போன்று அநுர ஆடினாலும் அநுரவுக்கு ஏற்றால் போன்று நாங்கள் ஆடுவதற்கு தயாரில்லை. நாங்கள் புத்தரின் சீடர்கள். இதனால் குறித்த வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டும். நாங்கள் புத்த ரின் புனித பூமியை பாதுகாக்கவே நடவ டிக்கை எடுத்துள்ளோம். புத்தர் எங்களுக்கு கற்பித்துள்ள தர்மங்களுக்கமைய அரசிய லமைப்பில் உள்ள உரிமைகளுக்கமைய இந்த இடத்தில் இருந்து சத்தியாக்கிரகக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை வெளிப்படுத்துங்கள். இந்தியாவின் பயணப் பாதை மிகவும் ஆபத்தானது. அகண்ட பாரதத்தை அமைப்பதற்காக இந் தியாவுக்கு அடிபணிந்த தனி ஈழமொன்றை அமைக்கவே இந்தியா பயணிக்கின்ற து. இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு முடிந்துவிட்டது. சர்வதேச புலம்பெயர்
தமிழர்களின் நிதி உதவியில் அவர்களை எண்ணங்களை முழுமைப்படுத்த அதுர ஜனாதிபதியாகியுள்ளார். அத்துடன் இஸ் லாமிய அடிப்படைவாதிகளை மகிழ்விக் கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஞானசார தேரர் இன்னும் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் தர்ம நீதிமன்றத்திலேயே இந் தப் பிரச்சினைகள் தொடர்பில் விசாரிக்க வேண்டும். வேறு நீதிமன்றங்களினால் விசாரிக்கும் அதிகாரங்கள் கிடையாது. எங்களுக்காக தளியான நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இதனால் நாங்கள் தொடர்பில் இந்த இடத்தில் தர்மதான வழி பாடுகளில் ஈடுபடுவோம். இந்த போராட் டத்தை இங்கிருந்து எங்கு கொண்டு செல் வது என்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *