பலதும் பத்தும்

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாமனாயக்கவிடம் இருந்து தேசிய உற்பத்தித்திறன் விருது முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் பெற்றுள்ளது.

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது | National Productivity Award Jaffna Secretariat

 

விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் 08.11.2026 பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வழங்கி வைத்தார்.

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது | National Productivity Award Jaffna Secretariat

இவ் விருது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஒருங்கிணைந்த குழுச் செயற்பாடு , அர்ப்பணிப்பான உழைப்பு மற்றும் பொது மக்களுக்கான சிறந்த வினைத்திறனான சேவை வழங்கலுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *