இலங்கை

தையிட்டி விகாரையில் மதச்சடங்கு தெற்கிலிருந்து வந்து குவிந்த பௌத்தர்கள்; கொட்டும் மழையில் எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டமானது, நேற்று திங்கட்கிழமை கடும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றுள்ளது.

தையிட்டியில், தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி, எவ்வித அனுமதிகளும் இன்றி விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விகாரையை அகற்றி , காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இந்த விகாரையில்  மத சடங்கு ஒன்று நேற்றைய தினம் மிகப் பெரியளவில் நடைபெற்றுதுடன், அதற்காக தென்னிலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான பௌத்தர்கள் அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *