இலங்கை

நாட்டின் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

நாட்டின் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் வறுமை நிலைமை 30 வீதமாக அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஆறு மில்லியன் மக்களுக்கு ஓரு வேளை போசாக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

18 வீத பெறுமதி சேர் வரி போன்ற மறைமுக வரிகளினால் ஏழைகள் செல்வந்தர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக அதிகளவான அந்நிய செலாவணி கையிருப்புக்கள் செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாண்டு காலத்தில் பாரிய வெளிநாட்டு முதலீடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பலவீனமடைவது, அடிக்கடி மாறக்கூடிய தெளிவற்ற கொள்கைகள் மற்றும் சாதகமற்ற வரி கொள்கைகள் காரணமாக இலங்கை முதலீடுகளுக்கு சாதகமற்ற சூழலாக அமெரிக்க மாநிலத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் செப்டம்பர் மாத நிலவரப்படி 28% அதாவது நான்கில் ஒரு பங்கு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் பாரிய வருமானத்தை எதிர்பார்த்த போதிலும் உண்மையில் பாரியளவு வெளிநாட்டு கையிருப்பு இழக்கப்பட்டதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளின் மூலம் நன்மை கிடைக்கப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *