உலகம்

உக்ரைனுக்கு 1.67 பில்லியன் டொலர் நிதியுதவி – IMF ஆய்வு

உக்ரைனுக்கான கடன் திட்டத்தின் மீதான மறுஆய்வை சர்வதேச நாணய நிதியம் இன்று ஆரம்பித்துள்ளது.

இதன்மூலம் உக்ரைனுக்கு , 1.67 பில்லியன் டொலர் அளவிலான நிதி உதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

உக்ரைனின் முக்கிய சர்வதேச கடன் வழங்குநரான சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பு, பிற பங்காளிகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கும், பொருளாதார நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் மிக அவசியமானது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைனுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பிரிசில்லா டோஃபானோ Priscilla Toffano, இந்தக் கலந்துரையாடல்கள் மேக்ரோ பொருளாதார மற்றும் நிதிசார் கொள்கைகள், அத்துடன் முக்கிய கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மறுஆய்வானது, உக்ரைனுக்காக சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள நான்கு ஆண்டு காலத் திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மதிப்பீடுகளை உள்ளடக்கியது.

இதன் மூலம் சுமார் 1.67 பில்லியன் டாலர் நிதியுதவி கிடைப்பதற்கான வழி பிறக்கக்கூடும்.

ரஷ்யாவுடனான மோதல் தொடர்ந்து நீடிக்கும் சூழலில், உக்ரைன் பாரிய அளவிலான நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *