இலங்கை

அடாத்தாக ஆக்கிரமித்தேன்; ஸ்ரீதர் திரையரங்கிலிருந்து வெளியேறுகிறார் டக்ளஸ்

முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரான்லி வீதியில் உள்ள ஆதனமொன்றை(முன்னைய (ஸ்ரீதர் திரையரங்கு) அடாத்தாக ஆக்கிரமித்து வைத்தமையை ஏற்றுக்கொண்டதுடன், அதிலிருந்து வெளியேறுவதற்கும் இணங்கியுள்ளார். வழக்காளிகளான விஜிதா தியாகராஜா மற்றும் கணபதிப்பிள்ளை கேதீஸ்வரநா தன் ஆகியோர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் தமக்குச் சொந்தமாக உள்ள ஆதனத்தை டக்ளஸ் தேவானந்தா 30 வரு டங்களுக்கு மேலாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த ஆதனத்தை மீள ஒப்படைக்கு மாறு பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்ததாகவும், 2015ஆம் ஆண்டு ஆத னத்தை மீள ஒப்படைப்பதாக டக்ளஸ் தேவானந்தா எழுத்து மூலம் உறுதியளித்த போதிலும், இதுவரை அதை ஒப்படைக் கவில்லை என்றும் வழக்காளிகள் குறிப் பிட்டிருந்தனர்.

இந்த வழக்கில் வழக்காளிகள் சார்பில் பல ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டி ருந்த நிலையில், எதிராளியான டக்ளஸ் தரப்பிலும் ஆட்சேபனை மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதி மன்றத்தில் அண்மையில் விசார ணைக்காக எடுக்கப்பட்டபோது, டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்,
அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்த காலங்களில் அந்த அதிகாரங்க ளைப் பயன்படுத்தி குறித்த ஆதனத்தில் அடாத்தாக ஆட்சிபுரிந்துள்ளார் என்று நீ திமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட் டபோது, வழக்காளிகளான விஜிதா தியாகராஜா மற்றும் கணபதிப்பிள்ளை கேதீஸ்வரநாதன் ஆகியோரே குறித்த ஆதனத்தின் உரிமையாளர்கள் என்பதை டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக்கொண்டார். அத்துடன் அந்த ஆதனத்தில் இருந்து வெளியேறுவதற்கு 3 வருடங்கள் அவ காசம் கோரினார். எனினும், இதற்கு வழக் காளிகள் தரப்பு கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர். இதையடுத்து, அந்த ஆத னத்தில் இருந்து அடுத்த 18 மாதங்களில் வெளியேறுவதற்கு டக்ளஸ் தேவானந்தா உடன்பட்டுள்ளார்.

வழக்காளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத் தரணிகள் சிவானந்தராஜா, வீரகத்திப் பிள்ளை கௌதமன் ஆகியோர் முன்னி லையாகினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *