இலங்கை

பெளத்தர்களின் அநுராதபுரத்தில் வேறு மதத்தவர்களுக்கு இடமில்லை;  போராட்டத்தை ஆரம்பித்த கஷ்சப தேரர் அறிவிப்பு

அநுராதபுரத்தில் வேறு மதத்தவர்களுக்கு இடமில்லை பெளத்தர்களின் உரிமையுடய அநுராதபுரம் புனித பூமியை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதற்கு எதிராக எங்கள் போராட்டத்தினை அநுராதபுரம் புனித பூமியில் ஆரம்பித்துள்ளோம்.அநுரகுமாரவின் பெளத்த விரோத அரசாங்கம் எங்களை தாக்கி சிறைக் கூடங்களில் அடைத்தாலும் கூட எங்களுடைய போராட்டத்தினை நிறுத்தப் போவதில்லை என பலாங்கொட கஷ்சப தேரர் தெரிவித்தார்.

அநுராதபுரம் புனித ருவன்வெலிசேயவிற்கு அருகிலுள்ள( தன்சல் களாப்ப) தானசாலை வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சத்தியாகிரக போராட்ட மேடையில் இருந்து ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மிகவும் அகிம்சாவாதத்துடன் நாங்கள் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.அவ்வாறு ஆரம்பித்த போராட்டத்திற்கு மிலேச்சத்தனமான பொலிஸார் எங்களை தாக்கினர் எங்களுடைய பிக்குகளை தலை கவசங்களால் தாக்கி கால்களால் மிதித்தனர் அது சம்பந்தமான வீடியோ காணொலிகள் எங்களிடம் இருக்கின்றன .

நாங்கள் யாரையும் தாக்குவதற்கு வரவில்லை ஆயுதங்களை எடுத்து வரவில்லை நிராயுத பாணிகளாகவே இவ்விடத்திற்கு வந்தோம்.அவ்வாறு வந்த எங்களைத்தான் பொலிஸார் தாக்கினர்.அநுரகுமாரவின் பெளத்த விரோத அரசாங்கத்தால் எங்களை தாக்கி சிறைக் கூடங்களில் அடைத்தாலும் கூட எங்களுடைய போராட்டத்தினை நிறுத்தப் போவதில்லை.

தம்புத்தேகமவில் பிறந்த எலார தம்புத்தேகமவின் எலாரவை துரத்தியடிக்கும் வர்த்தமானியை முடக்கும் போராட்டத்தினைத்தான் நாங்கள் அநுராதபுரத்தில் ஆரம்பித்துள்ளோம்.இது அநுர பிறந்த அநுராதபுரம் தானே? அங்குதான் நாங்களும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.அநுராதபுரத்திலுள்ள மக்கள்தான் எங்களை அழைத்தனர் அந்த அழைப்பினை ஏற்றுத்தான் இங்கு வந்தோம். எங்களது காணிகள் அனைத்தும் பறிபோகப் போகிறது இருப்பிடம் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது அதனை பாதுகாத்துத் தாருங்கள் என்று கூறியதை ஏற்றே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேறு மதத்தவர்களுக்கு இதனை எழுதிக் கொடுக்க முயற்சிக்கின்றனர் சர்வமதமாக்கப் பார்க்கின்றனர் அதற்கு ஒருபோதும் இடமில்லை .திருத்தங்கள் இல்லை வர்தமானியை நிறுத்தவேண்டும் அதனை முற்றாக ரத்துச்செய்யவேண்டும்.இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை வெளிப்படுத்த வேண்டும்.இந்த தாய் நாட்டினை வேறு நாட்டவருக்கு எழுதிக் கொடுப்பதை அனுமதிக்க முடியாது அவை நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

எமது உரிமையை குழிதோண்டி புதைப்பதற்கு அநுர குமாரவின் அரசாங்கம் முயற்சிக்கின்றது. நாங்கள் கெளரவமளிப்பது பெளத்த சட்டத்திற்கு புத்த பெருமானின் சட்டத்தை நாட்டின் சட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் அவை தெளிவாக கூறப்பட்டுள்ளது.நாங்கள் நீதிமன்றத்தை அவமதிக்க வில்லை நீதிமன்றத்தில் தவறு இல்லை .பொலிஸார் தான் தவறினை செய்கின்றனர் பொலிஸார் தான் நீதிமன்றத்தினை ஏமாற்றுகின்றனர்.பொலிஸார் பீ அறிக்கை ஊடாக கூறும் விடயங்களை ஏற்றுத்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. எங்களுடய சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவிப்பார்கள்.நாங்கள் அநுராதபுரத்தில் ஆரம்பித்த போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *