இலங்கை

அநுர அரசுக்கு எதிராக புது வியூகம் அமைக்கும் மகி்ந்த தரப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம், சஜித் பிரேமதாசவுடன் இணைந்து வித்தியாசமானதொரு பிரசாரத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஜித் பிரேமதாசவுக்கு அவர் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பிய கடிதம் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சமகால அரசாங்கத்தின் கீழ் நீதிபதிகள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிராக நாடாளுமன்ற விவாதம் ஒன்றை கோருமாறு இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பஹா முன்னாள் நீதவான் பந்துல குணரத்ன மற்றும் பலங்கொட கஸ்ஸப தேரர் ஆகியோரை மையப்படுத்தியே இந்தத் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கம்பஹா முன்னாள் நீதவான் பந்துல குணரத்ன தொடர்பில் நீதி சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்திருந்த 6 ஆண்டுகளுக்கு முந்திய பழைய முறைப்பாடுகள் கூட விசாரிக்கப்பட்டு அவசர இடமாற்றம் வழங்கப்பட்டது.

அதேபோல், தாம் ராஜபக்ச படையை சேர்ந்தவர் என வெளிப்படையாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இத்தகைய பின்னணியிலேயே பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற விவாதம் ஒன்றை கோருவதற்கு முற்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *