ஆஸ்திரேலியாவின் இன்றைய முக்கியச் செய்திகளின் சுருக்கம்

1. ராணுவ நிலங்கள் விற்பனை திட்டம் ரத்து ( Sydney Victoria Barracks)
-
ஆஸ்திரேலிய அரசு $1.8 பில்லியன் நிதி திரட்டுவதற்காக 67 ராணுவ மையங்களை விற்க திட்டமிட்டிருந்தது.
-
இதில் சிட்னியில் உள்ள 166 ஆண்டுகள் பழமையான ‘விக்டோரியா பேரக்ஸ்’ (Victoria Barracks) உள்ளிட்ட 4 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை விற்கும் முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்த 4 வரலாற்று தளங்களையும் விற்காமல் அரசே தொடர்ந்து பராமரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தோனேசிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா உதவி
-
இந்தோனேசியாவில் தீவிரமடைந்துள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா தனது NSW Rural Fire Service மூலம் C-130 ஹர்குலிஸ் விமானம் உள்ளிட்ட அதிநவீன தீயணைப்பு விமானங்களை அனுப்பி உதவி வருகிறது.
3. விளையாட்டு செய்தி: கிரிக்கெட் அணியில் மாற்றம்
-
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே, ஆஸ்திரேலிய முன்னணி பேட்டர் மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) அணியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()