இலங்கை

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் சஜித் அவசர சந்திப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டில் தற்சமயம் நிலவும் பொருளாதார நிலவரத்துக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களின் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து, அப்பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன.

குறிப்பாக, எரிபொருள் விலை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களும், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் மக்களின் வருமான மட்டம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் உழைக்கும் மக்களின் குடும்பப் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *