இலங்கை

அரசிற்கு மறைமுகமாக வலுசேர்க்கும் நாட்டின் பெரும் புள்ளிகள்..!

அண்மைக்காலமாக எதிர்க்கட்சிகள் பல்வேறு அரச எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், அரசிற்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த பிரேரணையில் உள்ள சில அம்சங்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவை என்பதால், அவற்றை நீக்கிவிட்டு புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அரசு தரப்பு கோரியது.

இருப்பினும், எதிர்க்கட்சிகள் அதற்கு உடன்படாததால் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர் பின்னடைவுகள்..

அதேவேளை, அரசாங்கத்தால் கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அரசிற்கு மறைமுகமாக வலுசேர்க்கும் நாட்டின் பெரும் புள்ளிகள்..! | Government Actions Opposition Parties Struggle

இவை ஜனநாயக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டமூலங்களின் அரசியலமைப்பு செல்லுபடி தன்மையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மறுபுறம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைமைத்துவ நெருக்கடியில் சிக்கியுள்ளது.

ராஜபக்சக்களின் பரிதாப நிலை..

எயார்பஸ் விமான கொள்முதல் மற்றும் ‘கிரிஷ்’ நில ஒப்பந்தம் தொடர்பான ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

அவருக்கு ஒரு வழக்கில் பிணை கிடைத்தபோதிலும், மற்றொரு வழக்கு நிலுவையில் இருப்பதால் நவம்பர் 19 வரை சிறையில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அரசிற்கு மறைமுகமாக வலுசேர்க்கும் நாட்டின் பெரும் புள்ளிகள்..! | Government Actions Opposition Parties Struggle

 

இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாத நிலையில், ராஜபக்ச குடும்பத்தை மட்டுமே நம்பியிருக்கும் பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதேவேளை, முதன்மை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக சிறைத்தண்டனை இரத்து செய்யப்பட்ட ஞானசார தேரருக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி செயல்படுவதாகக் கூறி, கூட்டணியில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

அரசிற்கு மறைமுகமாக வலுசேர்க்கும் நாட்டின் பெரும் புள்ளிகள்..! | Government Actions Opposition Parties Struggle

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) மீண்டும் இணைவது அல்லது கூட்டணி அமைப்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே சரியான உடன்பாடு எட்டப்படவில்லை.

இவ்வாறு தொடர்ந்து, எதிர்க்கட்சிகள், பின்னடைவையும் அரசியல் பரப்பில் பெரும் சரிவுகளையும் சந்தித்து வருகின்றமை மறுபக்கத்தில் அரசாங்கத்திற்கு சாதகமாக அமைவதாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *