ஏழாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று யாழில் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் தமிழ்த்துறை கந்தையா கார்த்திகேசு அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் ஏழாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு- 2026 இன்று வியாழக்கிழமையும் (05), நாளை வெள்ளிக்கிழமையும் (05) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர். பேராசிரியை. செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் தலைமையில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. சமூக விமர்சனக் கருவியாக இலக்கியம்: இருபத்தோராம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் எனும் கருப் பொருளில் மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்வுகளும் இடம்பெறும்.
மாநாட்டின் தொடக்க நிகழ்வுகள் இன்று காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை இடம்பெறும். மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.
நிகழ்வில் ஆய்வுக் கட்டுரைத் தொகுதி வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளதுடன் கல்வியலாளர்கள், மூத்த எழுத்தாளர்கள் என ஆறு ஆளுமைகள் விருது வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளனர். ஆய்வரங்க அமர்வுகள் இன்று பிற்பகல்-02 மணி முதல் மாலை-06 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெறும்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல்-02 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெறும். இதன்போது நடன அரங்கு, இசை அரங்கு, கூத்து அரங்கு என்பன மேடையேவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
![]()