இலங்கை

தனி நாடு கேட்டுப் போராடிய இனம் இன்று மாட்டை மேய்க்க மண்ணை கேட்கும் நிலை

தனி நாடு கேட்டு போராடிய இனம் இன்று மாட்டை மேய்க்க மண்ணை கேட்கும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் இனத் துரோகிகளாக செயற்பட்டு மண்ணைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை பார்த்து வெட்கப்படுகின்றேன் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான ஒழுங்குவிதிகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அர்ச்சுனா எம்.பி இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் மகாவலி குடியேற்றத்தால் எத்தனையோ தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் தமிழ் பேசும் மனிதனாக உங்கள் மண்ணுக்கு விசுவாசமாக இருங்கள். நீங்கள் மட்டக்களப்பில் பிறந்தவர். மட்டக்களப்புபென மரியாதை உள்ளது. மட்டக்களப்புக்கென வீரம் உள்ளது. ஆனால் அங்கு அப்பாவி மக்களின் மாடுகளை சுடுகின்றனர்.

பிரபு எம்.பி ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது மட்டக்களப்பு என்பது இன்று வரையில் வீரம் செறிந்த மண்ணாகும். அங்குள்ள மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு கஸ்டப்படுகின்றனர். அடுத்த முறை உங்களுக்கு எப்படி மக்கள் வாக்களிப்பர் என்று தெரியவில்லை.

ந்த மக்கள் மேய்ச்சல் தரையையே கேட்கின்றனர். ஒரு நாட்டை கேட்டு போராடிய இனம், விடுதலையை கேட்டு போராடிய இனம் இன்று மாட்டை மேய்க்க மண்ணை கேட்கும் போது, உங்களை போன்ற இனத்துரோகிகள் ஒற்றுமை இன்றி மண்ணைக் காட்டிக் கொடுப்பதை வெட்கமாக கருதுகிறேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *