இலங்கை

துமிந்தவுக்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு திகதியிடப்பட்டது

அண்மையில் வீட்டுத் தொகுதியொன்றில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்காக எதிர்வரும் 23ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐகுல் ஷெரகசினா என்ற கசகஸ்தான் நாட்டுப் பெண் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொள்ளப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

2025ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஹவ்லொக் சிட்டி குடியிருப்புத் தொகுதியில் உரிமமின்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *