பலதும் பத்தும்

பயணப் பொதிகளின் கட்டணத்தை மிச்சப்படுத்த இப்படியொரு ஐடியாவா?

விமானப் பயணத்தின்போது பயணப் பொதிகளின் எடை வரம்பை மீறினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்நிலையில், அந்தக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக இளம்பெண் ஒருவர் கையாண்ட வித்தியாசமான உத்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தனது பயணப் பொதியில் இருந்த சுமார் 10 கிலோ எடையுள்ள ஆடைகளைச் சூட்கேஸில் வைப்பதற்குப் பதிலாக, ஒவ்வொன்றாகத் தனது உடலில் அணிந்துகொண்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்

அந்த இளம்பெண் பல ஜாக்கெட்டுகள், பேன்ட்கள் என அடுக்கடுக்காக ஆடைகளை அணிந்து அவர் விமானப் பயணத்திற்குத் தயாராகியுள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

லக்கேஜ் கட்டணத்தை மிச்சப்படுத்துவதற்காக இவ்வாறானதொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ள இளம்பெண்ணின் செயல் இணையவாசிகள் மத்தியில் நகைச்சுவையான கருத்துகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *