இலங்கை

செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளைத் தேட வேண்டும்

வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணி விவகாரத்துக்கு நேர்ந்தது என்ன, வடக்கில் காணாமல் போனோர் விவாகரத்துக்கு பிரதான தீர்வாக,செம்மணி விவகாரம் தொடர்பில் கைதி, முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு தீர்வுகளை தேட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.கலாச்சாரம் காண்

பயிரிட படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாக, தேசிய மக்கள் சக்தி கட்சியின் ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இன்று அந்த காணிகளை தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது மோசமான துரோகம். இதை உடன் நிறுத்தி, தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்கு பிரித்து வழங்கும் ‘மலையக வாழ்வாதார காணி கொள்கையை’ அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வரவு செலவுத் திட்டம் மீதான உரை என்பது வெறுமனே, வரவு செலவு கணக்கு அல்ல. அது அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் மூன்றாம் ஆண்டுக்கான கொள்கை உரை ஆகும். இதுவே சம்பிரதாயம் என்பது, நீண்ட பாராளுமன்ற அனுபவம் கொண்ட ஜனாதிபதிக்கும் தெரியும், எனக்குத் தெரியும்,

இரண்டு வருடங்கள் காத்திருந்த எங்களுக்கு, அடுத்த வருடமாவது பல பிரச்சினைகள் தொடர்பான நடைமுறை தீர்வுகள் கிடைக்கும் என்ற அறிவித்தல்களை ஜனாதிபதி நிறைவேற்றுவார். ஜனாதிபதிக்கு இன்று (நேற்று) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தேன். அதில் 15 பிரதான விடயங்களை சுட்டிக்காட்டி அவற்றுக்கான தீர்வையும் கோரியுள்ளேன்.

பெருந்தோட்ட தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பில், கம்பனிகள் தொழிலாளரையும், ஜனாதிபதியையும் ஏமாற்றி உள்ளனர். கம்பனிகள் தொழிலாளர் கொண்டு வரும் தேயிலை கொழுந்து நிறை,இறப்பர் நிறை, இரண்டையும், உயர்த்தி உள்ளனர். நமது தொழிலாளர்கள், பணி செய்வது கம்பனிகளில் மட்டும் அல்ல. அரச தோட்டங்கள், தனியார் தோட்டங்கள்,சிறு தோட்ட உடைமை தோட்டங்கள், ஆகிய நான்கு துறைகளில் ஒரே வேலை செய்வதால், ஒரே சம சம்பளத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்த்து வழங்க,’ஒருநாள் சம்பள தொகைக்கு, கொளுந்து-இறப்பர் நிறை எவ்வளவு-‘ என்பவற்றை குறிப்பிட்டு, சம்பள நிர்ணய சபையில் தீர்மானித்து, அவற்றை வர்த்தமானி அறிவிப்பாக அறிவிக்க வேண்டும்.

பெருந்தோட்டங்களில் வாழும் திருமணம் ஆன ஒவ்வொரு குடும்பத்துக்கும், அவர்கள் தோட்டங்களில் வேலை செய்தாலும், இல்லாவிட்டாலும், அவர்கள் 200 வருடங்களாக அளித்துள்ள பங்களிப்பையும்,கருத்தில் கொண்டு, வதிவிட காணியாக, குறைந்த பட்சம் 15-பேர்ச் என்ற ‘மலையக வதிவிட காணி கொள்கையை’ அறிவிக்க வேண்டும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் பெருந்தோட்டங்களில் இந்திய-இலங்கை,நிதி உதவியினால் கட்ட போகும் தனி வீடுகள் எத்தனை, இந்திய-இலங்கை, நிதி உதவியினால், பெருந்தோட்டங்களில் மலைகளில் கட்ட பட விருக்கும் வீடுகள்,தொடர்மாடி வீடுகள் அல்ல, அவை காணி உரிமையுடன் கூடிய தனி வீடுகள் தான் என்பதை அறிவிக்க வேண்டும்.

பயிரிட படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாக, தேசிய மக்கள் சக்தி கட்சியின் ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இன்று அந்த காணிகளை தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது மோசமான துரோகம். இதை உடன் நிறுத்தி,தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்கு பிரித்து வழங்கும்இ ‘மலையக வாழ்வாதார காணி கொள்கையை’ அறிவிக்க வேண்டும்.

தித்வா பேரழிவினால், பெரிதும் பாதிக்கபட்ட கண்டி, பதுளை, நுவரேலியா, பெருந்தோட்ட மக்கள் கணிசமானோர் இன்னமும் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு நீதி எங்கே? மலையக தித்வா அகதிகளின் மறுவாழ்வு தொடர்பில் உங்கள கொள்கையை உறுதியாக அறிவிக்க வேண்டும்.

சமூக-பொருளாதார வளர்ச்சி புள்ளி விபரங்களில் பிற்படுத்தபட்ட பிரிவினர் என்ற அடிப்படையில்,பெருந்தோட்ட மக்களுக்கான கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கான விசேட நிவாரண ஒதுக்கீட்டு தொகையை வெளிப்படுத்த வேண்டும்.

சமூக பொருளாதார வளர்ச்சி புள்ளி விபரங்களில் பிற்படுத்தபட்ட பிரிவினர், என்ற நிலையில் இருந்து விசேட நடவடிக்கைகள் மூலம் மலையக மக்களை கை தூக்கி விட நாம் சட்டபடி உருவாக்கிய ‘ நவீடா ‘ என்ற மலையக அபிவிருத்தி சபையை கலைத்து, விட மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்.

இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், அந்த ‘புதிய அரசியலமைப்பு உருவாக்கம்’ என்ற உங்கள் உறுதிமொழிக்கு, என்ன ஆனது? ஒரு வருட அவகாசத்தில் நீங்கள் நடத்துவதாக சொன்ன மாகாண சபை தேர்தல், என்ன ஆனது? நல்லெண்ண மன்னிப்பில் விடுப்பதாக சொன்ன நீண்டகால தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மறக்கடிக்கப்பட்டதா,கலாச்சாரம் காண்

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக அகற்றுவோம் என எங்களுடன் சேர்ந்து ஜனாதிபதியும் போராடி னார்.இந்த மோசமான மாற்று சட்டம் கொண்டு வர முயல்கிறீர்கள். இனி புது சட்டமோ,திருத்தமோ வேண்டாம். புதிய சட்ட வரைபையும், பழைய சட்டத்தையும் முழுமையாக அகற்ற வேண்டும்.

விடுவிப்பதாக உறுதி அளித்த, வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணி விவகாரத்துக்கு என்ன ஆனது? வடக்கின் காணாமல் போனோர் விவாகரத்துக்கு பிரதான தீர்வாக,செம்மணி விவகாரம் தொடர்பில் கைதி, முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு தீர்வுகளை தேட வேண்டும்.

மலையக மக்களுக்கு காணி உரிமையே உறுதியானது. காணி உரித்து கிடைத்தால் தான் அந்த மக்களின் குடியுரிம உறுதியாகும். முதலில் காணியை வழங்குங்கள். வசதி இல்லாதவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நிதி வழங்குவது பற்றி அரசாங்கம் ஆராயலாம்.இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளலாம் .ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் இவற்றுக்கு தீர்வை எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *