உலகம்

இடைக்கால தேர்தலில் தோற்றால் வீட்டோ-வாக மாறுவேன்; மீண்டும் டிரம்பால் சர்ச்சை

தேர்தலில் ஜனநாயக கட்சி வென்றால் நாடாளுமன்றத்தில் அவர்கள் கொண்டு வரும் மசோதாக்களை எனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்பேன். இதன் மூலம் மிஸ்டர் வீட்டோ-வாக நான் மாறுவேன்’ என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அக்கட்சியே அமெரிக்க நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.

கீழவையான பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், மேலவையான சபையில் மொத்தம் 100 இடங்களில் காலியாகும் 35 இடங்களுக்கும் இன்று நடைபெறுகிறது.

நவம்பர் 4ம் திகதி அதிகாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இந்த தேர்தல் பற்றி கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ‘ஒருவேளை இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வென்றால் நாடாளுமன்றத்தில் அவர்கள் கொண்டு வரும் மசோதாக்களை எனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்பேன். இதன் மூலம் மிஸ்டர் வீட்டோ-வாக நான் மாறுவேன்’ என கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *